Tamilசெய்திகள்

காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் கூட்டம் – பிரியங்கா காந்தி பங்கேற்பு

காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் கட்சிப் பொறுப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரியங்கா காந்தி, உம்மன் சாண்டி, முகுல் வாஸ்னிக், தாரிக் அன்வர், ரந்தீப் சுர்ஜேவாலா, அஜய் மாக்கன் மற்றும் பொருளாளர் பவன்குமார் பன்சால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் அமைப்புத் தேர்தல், உறுப்பினர் சேர்க்கை மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.