X

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கட்சியின் இடைக்கால  தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள், புதிய தலைவர் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், அரசியல் நிலைமை, பணவீக்கம் மற்றும் கடுமையான விவசாய நெருக்கடி, விவசாயிகள் மீதான கொடூர தாக்குதல் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் செப்டம்பர் 20-ம் தேதி வரை நடைபெறும் என்றும், நவம்பர் 2021 முதல் மார்ச் 2022 வரை காங்கிரஸ் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என்றும் அவர் கூறினார்.