காங்கிரஸை கண்டு அதிமுக-வுக்கு பயம் இல்லை – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
குமரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கன்னியாகுமரி வந்தார்.
கன்னியாகுமரியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் நாங்கள் பக்க பலமாக இருப்போம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறிய கருத்துக்களை கேட்டு நான் பயப்படவில்லை.
காங்கிரசை கண்டு அ.தி.மு.க.வுக்கு எந்த பயமும் இல்லை.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த ஆர்ப்பாட்டத்திலேயே 50 பேர் தான் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியில் யார் இருக்கிறார்கள்? தோல்வியை கண்டு பயந்து ஓடியவர் ராகுல் காந்தி. அந்த நிலையில் தான் காங்கிரஸ் கட்சி இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கன்னியாகுமரி வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கலெக்டர் பிரசாந்த் வடநேரே மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.