X

காங்கிரஸுக்கு 18, சிவசேனாவுக்கு 20 – மகாராஷ்டிராவில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு

மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து மக்களவை தேர்தலை சந்திக்கின்றன.

இந்த மூன்று கட்சிகளும் இந்தியா கூட்டணியில் உள்ளன. இந்தியாவில் அதிக மக்களவை இடங்களை கொண்ட 2-வது மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது. இங்கு ஒவ்வொரு கட்சிகளும் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து மூன்று கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

சுமார் ஒரு மாதங்களுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. மும்பையில் உள்ள தொகுதிகளை ஒதுக்குவதில் காங்கிரஸ்- உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி இடையே இழுபறி நீடித்து வந்தது. இதனால் ராகுல் காந்தி உத்தவ் தாக்கரேயிடம் டெலிபோன் மூலம் பேசினார்.

இந்த நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 20 இடங்களிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் போட்டியிடுகின்றன. விரைவில் எந்தெந்த தொகுதிகள் என்பது அறிவிக்கப்படும்.

48 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா 23 இடங்களிலும், சிவசேனா 18 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 1 இடத்திலும், வெற்றி பெற்றிருந்தன. சிவசேனா 23 இடங்களில் போட்டியிட்டிருந்தது. தற்போது சிவசோன 2-வது உடைந்துள்ளது. உத்தவ் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 3 இடங்களில் குறைவாக போட்டியிடுகிறது. காங்கிரஸ் ஒரு இடங்களில் குறைவாக போட்டியிடுகிறது. சரத்பவார் கட்சி 15 இடங்களில் குறைவாக போட்டியிடுகிறது.

வன்சித் பகுஜன் அகாதி என்ற மாநில கட்சி உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியில் இருந்து 2 இடங்களை பெறும். சுயேட்சை வேட்பாளர் ராஜு ஷெட்டி சரத் பவாரிடம் இருந்து ஒரு இடம் பெற்றுக் கொள்வார்.