Tamilசெய்திகள்

காங்கிரஸுக்கு ஆம் ஆத்மி கட்சி கொடுத்த ஆஃபார்!

டெல்லியில் முதன்முதலாக ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி தற்போது பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சி செய்து வருகிறது. எங்கெல்லாம் பா.ஜனதா- காங்கிரஸ் இடையில் நேரடி போட்டி இருந்து வருகிறதோ, அங்கெல்லாம் ஆம் ஆத்மி கட்சி தலை தூக்க தொடங்கியுள்ளது.

டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தை கூட பிடிக்க முடியாத அளவிற்கு செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.

ராஜஸ்தான் மறறும் மத்திய பிரதேசம் மாநிலங்களில் பா.ஜனதா- காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவும். இங்கு ஆம் ஆத்மி சட்சி களத்தில் இறங்கும். அப்படி இறங்கும்போது வெற்றிபெற முடியவில்லை என்றாலும், காங்கிரசின் கணிசமான வாக்குகளை பிரிக்கும். அது பா.ஜனதாவுக்கு சாதகமாக அமைந்துவிடும்.

இதனால் காங்கிரஸ் மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க கடினமானதாகிவிடும். இந்த சூழ்நிலையை புரிந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சி டெல்லி, பஞ்சாப் மாநிலங்களை தங்களிடம் காங்கிரஸ் தந்துவிட வேண்டும் என நினைக்கிறது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆம் ஆத்மி ஒரு ஆஃபர் வழங்கியுள்ளது. டெல்லி மாநில சுகாதாரததுறை மந்திரியான சவுரவ் பரத்வாத் இதுகுறித்து கூறியதாவது-

டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 2015 மற்றும் 2020-ல் ஒரு இடத்தை கூட பிடிக்கவில்லை. டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் நாங்கள் போட்டியிடமாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி சொல்லும் என்றால், அதன்பிறகு நாங்கள் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று அறிவிப்போம்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ”காங்கிரஸ் கட்சி நாட்டின் பழமையான கட்சி. ஆனால் தற்போது அது Copy-Cut-Congress ஆகியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இருந்து எல்லாவற்றையும் திருடி கொண்டிருக்கிறார்கள். அவரக்ளுக்கு சொந்த யோசனை கிடையாது. காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் இல்லை என்ற குறைபாடு மட்டுமல்ல, யோசனை இல்லை என்ற குறைவாடும் உள்ளது” என விமர்சனம் செய்துள்ளார்.

தற்போது, ஆம் ஆத்மி டெல்லி மாநில அதிகாரத்திற்காக போராடி வருகிறது. ஆம் ஆத்மி கட்சியால் தனியாக போராட முடியாது. பாராளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வர இருக்கும் சட்டத்தை முறியடிக்க காங்கிரஸ் உதவி தேவை. மேலும், ராகுல் காந்தி நடைபயணத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. பா.ஜனதாவை எதிர்கொள்ள தனிப்பெரும்பான்மையுடன் டெல்லியில் ஆட்சி அமைத்தால்தான் முடியும் என ஆம் ஆத்மி நினைக்கிறது.

இதனால் ஆம் ஆத்மி கட்சியின் இந்த கருத்தை காங்கிரஸ் ஏற்பதற்கான வாய்ப்பு குறைவுதான். கெஜ்ரிவால் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பாராளுமன்றத்தில் தங்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு வருகிறார். ஆனால், காங்கிரஸ் கட்சி இதுவரை டெல்லி மாநில அதிகாரம் விசயத்தில் வாய்திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.