காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்காவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் தீவிர அரசியலில் இணைந்துள்ள பிரியங்கா காந்திக்கு எனது வாழ்த்துக்கள், அவரது புதிய அவதாரம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் தி.மு.க. எம்.பி. கனிமொழியும் பிரியங்காவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் “கிழக்கு உத்தரபிரதேச காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்திக்கு வாழ்த்துக்கள்”, அவரது பணி சிறக்க வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.