X

காங்கிரசை விமர்சித்த பிரதர் மோடிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலடி

தமிழகத்தில் 1962-க்கு பிறகு காங்கிரசை மக்கள் வெறுத்து ஒதுக்கி விட்டார்கள். காங்கிரஸ் காணாமல் போய் விட்டது என்று பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்தார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

எங்களை பற்றி பேச இவர்கள் யார்? காங்கிரஸ் 1962 வரை ஆண்ட கட்சி. இப்போதும் பா.ஜனதாவை விட பலமாக இருக்கும் கட்சி. தமிழகத்தில் பா.ஜனதா எங்கே இருக்கிறது? கடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்கள் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். நீங்கள் (பா.ஜனதா) 23 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

அந்த கட்சியின் இன்றைய தலைவரும் தோற்றுப் போனார். அன்றைய தலைவரும் தோற்றுப்போனார். அது மட்டுமல்ல நாங்களும் கூட்டணியில் தான் இருந்தோம். நீங்களும் கூட்டணியில் தான் இருந்தீர்கள். மக்கள் எங்களை ஏற்றுக் கொண்டார்கள். உங்களை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஓசியில் உரிமை கொண்டாடலாமா? இதுதானே தமிழ்நாட்டில் பா.ஜனதா நிலைமை. நடப்பதற்கு காலே இல்லாதவன் களத்தில் ஓடிக் கொண்டிருப்பவனை பார்த்து விமர்சித்தது போல் உள்ளது. பிரதமர் மோடியின் விமர்சனத்தை தமிழக மக்கள் வேடிக்கையாகத்தான் பார்ப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags: tamil news