X

காக்க காக்க 2-வில் நடிக்க ரெடி – ஜோதிகா அறிவிப்பு

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் கடந்த வாரம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை சூர்யாவும், ஜோதிகாவும் வீட்டில் இருந்தபடியே விளம்பரப்படுத்தி வந்தனர். அதன் ஒருபகுதியாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

அப்போது, ரசிகர் ஒருவர் ஜோதிகாவிடம் காக்க காக்க 2-ம் பாகம் உருவானால் சூர்யாவுடன் நடிப்பீர்களா? என கேட்டார். இதற்கு பதிலளித்த ஜோதிகா, ‘கவுதம் மேனன் காக்க காக்க 2 படத்திற்காக சுவாரஸ்யமான கதையுடன் வந்தால் நானும் சூர்யாவும் நிச்சயம் நடிப்போம் என தெரிவித்துள்ளார்.