இயக்குனரும், நடிகருமான கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ஜோஷ்வா இமை போல் காக்க பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் உள்ளது. இந்த படம் 2019ம் ஆண்டில் படப்பிடிப்பு முடிந்தது. ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் ரிலீஸ் ஆகவில்லை.
இந்த திரைப்படம் வரும் பிப்ரவிர மாதம் 23ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான வருண் நாயகனாக நடித்துள்ளார். மேலும், கிருஷ்ணா, ராஹி, யோகி பாபு, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ஜோஷ்வா படத்தின் தால் என்கிற பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வௌியாகியுள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது.