Tamilசெய்திகள்

கவாசகியின் நின்ஜா 650 மேம்பட்ட மாடல் இந்தியாவில் அறிமுகம்!

கவாசகி இந்தியா நிறுவனம் மேம்பட்ட நின்ஜா 650 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 2025 கவாசகி நின்ஜா 650 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 7 லட்சத்து 27 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த புதிய மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட அதிகளவு மேம்படுத்தப்பட்டு உள்ளதால், முந்தைய மாடலை விட இதன் விலை ரூ. 11,000 அதிகரித்துள்ளது.

2025 நிஞ்ஜா 650 பைக் பச்சை நிறத்தில் வெள்ளை, மஞ்சள் மற்றும் கருப்பு நிற கோடுகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய மாடலிலும் 649சிசி, பேரலெல் ட்வின் லிக்விட்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 67 ஹெச்பி பவர், 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.