புதுச்சேரி சட்டசபை கூட்டத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர், இந்த குறைவான காலத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஒரு சிலரது மிரட்டலால் அவர் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதை ஏன் யாரும் பேசுவதில்லை. கலால் துறைக்கு மட்டும் ஏன் இந்த முக்கியத்துவம். இதன் பின்னால் என்ன நடந்தது, என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் நாராயணசாமி, சுகாதாரத்துறை அதிகாரி விவகாரத்தில் சட்டமன்றத்தில் நான் வருத்தம் தெரிவித்து இந்த விஷயத்தில் கவர்னரின் நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளேன்.
இதேபோல் மதுபான விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தாசில்தாருக்கு மீண்டும் பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்தார்.