Tamilசெய்திகள்

கவர்னர் எதிர்கட்சியாக செயல்படுகிறார் – கனிமொழி எம்.பி

ராயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் சமத்துவ பொங்கல்விழா தி.மு.க.மகளிர் அணி சார்பில் நடைபெற்றது. இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்ட மன்றத்தில் இருந்தோ அல்லது நாடாளுமன்றத்தில் இருந்தோ எதிர்கட்சிகள் தான் வெளிநடப்பு செய்வார்கள். ஆனால் இங்கு கவர்னர் வெளிநடப்பு செய்திருக்கிறார். அவர் எதிர்கட்சியாக செயல்படுகிறார் என்பதையே அவரின் வெளிநடப்பு உணர்த்துகிறது.

கவர்னரை தூண்டி விட்டு செயல்படுபவர்கள் இது ஜனநாயக நாடு என இதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். கவர்னரின் வெளிநடப்பு என்பது அப்பட்டமான மரபு மீறல். மத்திய அரசு எழுதி கொடுக்கும் உரையை தான் குடியரசு தலைவர் படிக்கிறார். குடியரசுதலைவர் அதை படிக்காமல் தான் நினைத்ததை படிப்பேன் என்றால் மத்திய அரசு ஒப்புக்கொள்ளுமா? பா.ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கவர்னரை ஒரு கருவியாக பயன்படுத்தி வருவது ஜனநாயக விரோத செயல்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி, ராயபுரம் எம்.எல்.ஏ. ஐட்ரீம் மூர்த்தி, மாவட்டச் செயலாளர் தா.இளைய அருணா, மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் குமரி விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.