2016-ஆம் ஆண்டு வெளியான ‘கவலை வேண்டாம்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு
அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்ததன் மூலம், படவாய்ப்புகளும் குவிந்து வந்தன. சமீபத்தில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர் பல மாதங்கள் ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் பழைய நிலைக்கு மீண்டு, ஒரு சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
சமூக வலைதளங்களிலும் யாஷிகா ஆனந்த் சுறுசுறுப்பாக இருப்பவர். ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடி பல ஏடாகூடமான கேள்விக்கு பதிலளித்தும் உள்ளார். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் யாஷிகா தற்போது பேண்ட் – சட்டையில் கவர்ச்சி காட்டும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.