X

கவனம் ஈர்க்கும் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ டிரைலர்

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பார்க்கிங்’ . திரில்லர் ட்ராமாவான ‘பார்க்கிங்’ திரைப்படத்தை ‘பலூன்’ பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்துள்ளார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், ‘பார்க்கிங்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பார்க்கிங்கால் ஏற்படும் பிரச்சினையை விவரிக்கும் விதமாக உருவாகியுள்ள இந்த டிரைலரில் ‘என்ன செஞ்சவங்கள திருப்பி எதாவது செய்யனும்ல’ போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். ‘பார்க்கிங்’ திரைப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Tags: tamil cinema