X

கவனம் ஈர்க்கும் ‘பொம்மை’ படத்தின் ஸ்னீக் பீக்

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள படம் ‘பொம்மை’. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில்,  ‘பொம்மை’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு  வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இப்படம் வருகிற ஜூன் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: tamil cinema