X

‘கழுகு 2’ படத்தில் குத்தாட்டம் போட்ட யாஷிகா ஆனந்த்!

சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா – பிந்து மாதவி, தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான `கழுகு’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அதன் இரண்டாவது பாகம் `கழுகு-2′ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது.

கிருஷ்ணா, பிந்து மாதவி, காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திலிருந்து சகலகலா வள்ளி என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாட்டில் நடிகை யாஷிகா ஆனந்த் குத்தாட்டம் போட்டுள்ளார்.

ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பை கவனிக்கிறார். பிரபல விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Images: