கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரம் – சிபிசிஐடி அதிகாரியாக கோமதி நியமனம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் 19, சேலத்தில் 5, விழுப்புரத்தில் 4, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கள்ளச்சாராய பலி காரணமாக கள்ளக்குறிச்சி மருத்துவமனை முன்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அதிவிரைவு, ஆயுதப்படை என ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools