Tamilசெய்திகள்

கல்வியில் கடந்த 30 ஆண்டுகளாக வட மாவட்டங்கள் பின் தங்கியுள்ளது – டாக்டர்.அன்புமணி ராமதாஸ் பேட்டி

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:

* முதலமைச்சரை சந்தித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் 10.5% இட ஒதுக்கீடு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினோம்.

* வன்னியர் இட ஒதுக்கீடு அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. திமுக அரசு உறுதி செய்தது.

* பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இதுவரை அரசுக்கு பரிந்துரைக்கவில்லை.

* பல முறை அரசிடம் நேரிலும், தொலைபேசியிலும் வலியுறுத்தினோம். தரவுகளை சேகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தரவுகள் வழங்க தாமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

* இதை சாதி பிரச்சனையாக பார்க்க கூடாது. சமூக நீதி பிரச்சனையாக பார்க்க வேண்டும்.

* கல்வியில் கடந்த 30 ஆண்டுகளாக வட மாவட்டங்கள் பின் தங்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.