Tamilசெய்திகள்

கல்லூரி மாணவர்களிடையே ஏற்படும் மோதலை தடுக்க குழு – உயர்நீதிமன்றம் பரிந்துரை

கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

பச்சையப்பன், மாநில கல்லூரி மாணவர்கள் இடையேயான மோதலில் மாணவன் பலியானது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பல தலைவர்கள் படித்த புகழ்பெற்ற கல்லூரிகளில் குற்ற நடவடிக்கைகள் நடப்பது வேதனை அளிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், குற்றவாளிகள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் என்று நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா கருத்து தெரிவித்துள்ளார்.