கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பத்தை நேரடியாக வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்ய முடிவு
சென்னையில் வரும் 24ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப முகாம்கள் நடைபெற உள்ளது. முதல் கட்ட விண்ணப்ப பதிவு ஆகஸ்டு 4ம் தேதி வரை நடைபெறும் என்றும் 2ம் கட்ட பதிவு ஆகஸ்டு 16ம் தேதி வரையும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை பெற பொதுமக்கள் ரேஷன் கடைக்கு வர தேவையில்லை. விண்ணப்பம் மற்றும் டோக்கன், ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் வீட்டிற்கே நேரடியாக விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நாளில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்ப பதிவு முகாமிற்கு எடுத்து வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரிமைத் தொகை விண்ணப்ப பதிவு தொடர்பாக கட்டுப்பாட்டு அறை உதவி எண்களையும் அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.