கலைஞரை சந்தித்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் – சோனியா காந்தி பேச்சு

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் இன்று. கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் அண்ணா, கலைஞர் சிலைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார். கலைஞர் படத்திற்கு சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கலைஞரின் படத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, வில்சன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறுகையில்,

டாக்டர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் திமுகவைச் சேர்ந்த எனது சகாக்களுடன் இங்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பல சந்தர்ப்பங்களில் அவரை சந்தித்து, அவர் சொல்வதைக் கேட்டு, அவருடைய ஞான வார்த்தைகளாலும், அறிவுரைகளாலும் பயனடையும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. அவரை சந்தித்ததை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். இந்த கொண்டாட்ட நாளில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “தமிழ் மக்களின் மொழி, கலாச்சாரத்திற்கு பாதுகாப்பாக விளங்கிய தலைசிறந்த தலைவர் கருணாநிதி. இங்கு வந்ததில் எனக்கு மிகவும் பெருமையான விஷயம்,” என்று தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools