கலாய்த்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை பிரியா பவானி சங்கர்

தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வரும் பிரியா பவானி சங்கர், தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவரை, கிண்டலடித்து பதிவிட்டு வந்தனர். இதற்கு நடிகை பிரியா பவானி சங்கர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

நெட்டிசன் ஒருவர், “மேடம் நீங்களும் திருட்டு திராவிட சொம்பு தான” எனக் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த பிரியா பவானி சங்கர், “பெரிய சிஐடி… ஏதோ தேடி கண்டுபிடிச்ச மாதிரி இதுல என்ன பெருமை? என் டைம்லைன்ல இன்னும் தானே இருக்கு? 4 வருஷம் பத்திரிக்கை துறைல இருந்திருக்கேன். என் வேலையே அதுதான். இன்னும் நிறைய எழுதிருக்கேன். நன்கு தேடவும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

மற்றொருவர், “மேடம் இன்னும் 5 வருஷத்துல சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட், கிளவுட் நைன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களில் பட வாய்ப்பு பெறுவதற்காக தான் இப்படி டுவிட் செய்து கொண்டிருக்கிறார், எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த பிரியா, “ஆமாங்க ஐயா. ஒரே பதட்டமா இருக்கு. முதல்வர் ஆகிட்டீங்க வாழ்த்துகள்னு சொன்னா நாலஞ்சு கம்பெனில பட வாய்ப்பு தர்றதா உங்கள மாதிரி விவரம் தெரிஞ்சவங்க சொன்னாங்க. அதான் வாய்ப்பு தேடி டுவிட் போட்டுகிட்டு இருக்கேன். என்ன ஒரு யுக்தி இல்ல” என பதிலடி கொடுத்திருக்கிறார். பிரியா பவானி சங்கரின் இந்த டுவிட்கள் தற்போது சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகின்றன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools