துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பணிகளை கவுரவிக்கும் வகையில் சென்னையில் இன்று புத்தக வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடுகிறார்.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக உள்துறை மந்திரி நேற்று இரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கிண்டி ராஜ்பவனில் தங்கிய அமித்ஷாவை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று சந்தித்தார்.
இந்நிலையில், சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் உள்துறை மந்திரி அமித்ஷா, இன்று கர்நாடகா மாநிலத்துக்கு செல்கிறார். அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெலகாவி மாவட்டத்தில் சேதப்பகுதிகளை பார்வையிட உள்ளார் என பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.