கர்நாடக சட்டசபை தேர்தல் – கடைசி 2 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது பா.ஜ.க

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா 222 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருந்தது. சிவமொக்கா நகர், மான்வி தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது. சிவமொக்கா நகர் தொகுதியில் சமீபத்தில் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற மூத்த தலைவர் ஈசுவரப்பா, தனது மகன் காந்தேசுக்கு டிக்கெட் கேட்டு வந்தார்.

வேட்புமனு தாக்கலுக்கு இன்று ஒரு நாளே உள்ள நிலையில், கடைசி 2 தொகுதிகளுக்கும் பாஜக நேற்று இரவு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில், சிவமொக்கா நகர் தொகுதியில் ஈசுவரப்பாவின் மகன் காந்தேசுக்கு டிக்கெட் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சிவமொக்கா நகர் தொகுதியில் சன்னபசப்பா, மான்வி தொகுதியில் பி.வி.நாயக் ஆகிய 2 பேரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 224 தொகுதிகளுக்கும் பா.ஜனதா முதல் கட்சியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools