X

கர்நாடக அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் பதவியை ராஜினாமா செய்தார்

கர்நாடகா அதிமுகவின் முக்கிய நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் ராஜினாமா அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியானது. தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை களம் இறக்க மறுத்ததால் அதிருப்தி என தெரிவிக்கப்படுகிறது.

பிற மாநிலங்களில் ஏன் அதிமுகவை வளர்க்க வேண்டும் என மேலிடம் நினைப்பதாக கர்நாடகா நிர்வாகிகள் வேதனை அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மக்களவை தேர்தலில் யாருக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்பதை கூட கட்சி மேலிடம் கூற மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ளது. ஜெயலலிதாவுக்கு பிறகு கர்நாடகாவில் இருக்கும் அதிமுக நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை மதிப்பளிப்பதில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்து எஸ்டி குமார் ராஜினாமா செய்துள்ளார். ஓசூரில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது எஸ்.டி.குமார் தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ” கர்நாடகாவில் மக்களவை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பமனு அளித்தும், வாய்ப்பு வழங்கப்படவில்லை. யாரை ஆதரித்து பிரசாரம் செய்வதென்று தெரியாமல் கர்நாடகா அதிமுகவினர் குழம்பியுள்ளனர். அதனால், மாநில அதிமுக செயலாளர்
பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்து கொண்டேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.