கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 1.4,356 கன அடி தண்ணீர் திறப்பு

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளன. அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரிநீர் முழுவதும் திறந்து விடப்படுகிறது.

கே.ஆர்.எஸ்., அணைக்கு வினாடிக்கு, 49 ஆயிரத்து 244 கன அடி தண்ணீர் வரும் நிலையில் அணையிலிருந்து வினாடிக்கு 74 ஆயிரத்து 356 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தண்ணீர் வெளியேறும் மதகுகள் பகுதியில் மூவர்ண கொடியின் நிறத்தில் விளக்குகள் எரியவிடப்பட்டுள்ளன. இது காண்போரை கவர்ந்து வருகிறது.

இதுபோன்று, கபினி அணைக்கு வினாடிக்கு, 26 ஆயிரத்து 847 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இரு அணைகளிலிருந்தும், தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சத்து 4,356 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இந்த தண்ணீர் இன்று இரவு தமிழக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவை வந்தடையும் என தெரிகிறது. கர்நாடகா அணைகளில் இருந்து அதிகபட்ச தண்ணீர் வெளியேற்றப்படுவதால், ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என அபாயம் உள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து அமலில் உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools