X

கர்நாடகாவில் கார் மீது லாரி மோதி விபத்து – 6 பேர் பலி

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள குஷ்டகி தாலுகா கல்கேரி கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி பயங்கர விபத்துக்குள்ளனாது. இதில் இரண்டு குழந்தைகள் உள்பட சம்பவ இடத்திலேயே 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் அனைவரும் விஜயபுராவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கார் விஜயபுராவில் இருந்து பெங்களூருவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது மற்றும் லாரி தமிழ்நாட்டில் இருந்து குஜராத் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது என்றும் தெரியவந்துள்ளது. அப்போது காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா இரங்கல் தெரிவித்ததுடன் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.