கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகா சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நேற்று தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
மாநிலத்தில் முதல் டோஸ் தடுப்பூசியை 100 சதவீதம் பேர் செலுத்தி கொண்டுள்ளனர். 85 சதவீதம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களை காட்டியிலும், தடுப்பூசி போடுவதில் கர்நாடகம் முன்மாதிரியாக இருக்கிறது. மற்ற மாநிலங்களை விட தடுப்பூசி போடுவதில் கர்நாடக அரசு முதல் இடத்தில் இருக்கிறது. முதல் டோஸ் தடுப்பூசியை 100 சதவீதம் செலுத்தி முடிக்க கா்நாடக அரசு ஒரு ஆண்டு 7 நாட்கள் எடுத்து கொண்டு சாதனை படைத்திருக்கிறது.
இதற்காக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். குழந்தைகளுக்கு 29 சதவீத தடுப்பூசி போடப் பட்டுள்ளது. கதக் மாவட்டம் தகுதி படைத்தவர்களுக்கு 105 சதவீத தடுப்பூசியை செலுத்தி இருக்கிறது. பீதர், பாகல்கோட்டை, விஜயாப்புரா மாவட்டங்களும் 104 சதவீத தடுப்பூசியை செலுத்தி சாதனை படைத்திருக்கிறது.
இவ்வாறு மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.