கர்நாடகத்தில் ஆளில்லா விமானங்கள் முதல் தேஜாஸ் விமானங்கள் வரை உற்பத்தி செய்யப்படுகிறது – பிரதமர் மோடி பேச்சு

கர்நாடக மாநிலம் தும்கூருவில் இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் இலகுரக ஹெலிகாப்டரை நாட்டிற்கு அர்ப்பணித்தார். பின்னர் இதுகுறித்து பிரதமர் மோடி பேசியதாவது:-

21ம் நூற்றாண்டில் உலகின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் ஆற்றல் துறை மிகமுக்கிய பங்கு வகிக்கிறது. ஆற்றல் உற்பத்தியின் ஆதாரத்தை தேடுவதிலும், ஆற்றல் பகிர்விலும் இந்தியா வலுவாக உள்ளது. சர்வதேச நாணய நிதிய கணிப்பின்படி உலகிலேயே இந்தியா தான் வேகமாக வளரும் பொருளாதார நாடு என்றும், பெருந்தொற்று மற்றும் ரஷியா உக்ரைன் போர் சமயங்களில் கூட உலகளவில் இந்தியா பிரகாசமான இடத்தில் இருந்தது.

கர்நாடகா புதுமைகளின் பூமி. மாநிலத்தில் ஆளில்லா விமானங்கள் முதல் தேஜாஸ் விமானங்கள் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக மாநிலம் மாறியுள்ளது. துப்பாக்கிகள், விமானம் தாங்கி போர் விமானங்கள் முதல் போர் விமானங்கள் வரை இந்தியா தயாரிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மின்சார இருசக்கர வாகன பேரணியையும் மோடி தொடங்கி வைத்தார். அத்துடன் துமகுருவில் உள்ள ஹெச்ஏஎல் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை நாட்டுக்கு பிரதமர் அர்ப்பணித்தார். மேலும், தும்குரு தொழிற்பேட்டை மற்றும் தும்குருவில் இரண்டு ஜல் ஜீவன் மிஷன் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு த்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools