கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் தீவிர பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை நோய் பரவி வருகிறது. வடமாநிலங்களில் இந்த நோய்த்தொற்று பரவலாக பரவி வரும் நிலையில், அனைத்து மாநிலங்களும் கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதையடுத்து தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள், கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்து நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது.
இந்நிலையில் கேரளா மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோய் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த 32 வயது பெண் பலியாகி உள்ளார்.
கேரளாவில் இதுவரை 15 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது. மலப்புரத்தைச் சேர்ந்த 62 வயதான அப்துல் காதர் என்பவருக்கு கருப்பு பூஞ்சை நோயால் கண் ஒன்று அகற்றப்பட்டுள்ளது.