கருத்து சொல்லும் படங்களில் நடிக்க ஆசைப்படும் சாய் பல்லவி

சூர்யா ஜோடியாக சாய்பல்லவி, நடித்துள்ள என்.ஜி.கே. படம் விரைவில் திரைக்கு வருகிறது. மேலும் படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். தெலுங்கு, மலையாளத்திலும் பட வாய்ப்புகள் வருகின்றன. சாய்பல்லவி அளித்த பேட்டி வருமாறு:-

“நான் டாக்டருக்கு படித்து விட்டு நடிக்க வந்தேன். சினிமாவுக்கு திட்டம் போட்டு வரவில்லை. இந்த துறையில் தினமும் புதுமையான விஷயங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. சினிமாவில் எனக்கு வாய்ப்புகள் இருப்பது வரை நடிப்பேன். மார்க்கெட் குறைந்தால் என்னுடைய டாக்டர் தொழிலை பார்க்க போய்விடுவேன்.

எனக்கு சுற்றுப்பயணம் பிடிக்கும். நடனத்திலும் விருப்பம். நான் என்னை மாதிரி இருக்க விரும்புகிறேன். நடித்த படங்களில் வித்தியாசமான படம் தியா. ஒரு தாயாக நடித்தேன். இந்த படம் மூலம் என்னை மேலும் மெருகேற்றினேன். மாற்றங்களை நான் விரும்புவது இல்லை. ஒரே மாதிரி உணவை சாப்பிடுவேன். சிறுவயதில் இருந்து, பழகியவர்களுடன் தான் நட்பாக இருப்பேன்.

ஆனால் சினிமா தொழில் இதற்கு வித்தியாசமானது. எல்லாவித கதாபாத்திரங்களையும் செய்ய ஆசை இருக்கிறது. நான் நடித்த ஒவ்வொரு படமும் வெவ்வேறு விஷயங்களை எனக்கு கற்றுக்கொடுத்து இருக்கிறது. எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையும் வந்துள்ளது. எல்லோருக்கும் ஒரு கருத்து கொடுக்கிற கதையில் நடிக்க ஆசை இருக்கிறது.” இவ்வாறு சாய்பல்லவி கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools