கருணாநிதியின் 97வது பிறந்தநாள் – நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் மலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியதாதை செலுத்தினார். துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

கருணாநிதியின் 97- வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் ஒரு ஜோடிக்கு மு.க.ஸ்டாலின் இலவச திருமணம் செய்து வைத்தார்.

கொரோனா பரவலால் கருணாநிதியின் பிறந்தநாளுக்காக எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம் என தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மாறாக சமூக ஒழுங்கினைக் கடைப்பிடித்து, அவரவர் இடங்களில் தேவையானவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்து கருணாநிதியின் புகழைப் போற்ற வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news