கரீபியன் பிரீமியர் லீக் – செயின்ட் கிட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது

கரீபியன் பிரீமியர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரின் இறுதி ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் பேட்ரியாட்ஸ்-செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் மோதின.

இதில் முதலில் பேட் செய்த செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரகீம் கார்ன்வால், ரோஸ்டன் சேஸ் தலா 43 ரன்கள் எடுத்தனர்.

அடுத்து ஆடிய செயின்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி பரபரப்பான ஆட்டத்தில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்து முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

கிறிஸ் கெய்ல் (0), இவின் லீவிஸ் (6 ரன்), கேப்டன் வெய்ன் பிராவோ (8 ரன்) சொதப்பினாலும், இளம் வீரர் டோமினிக் டிராக்ஸ் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக ஆடி கதாநாயகனாக ஜொலித்ததுடன் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து இலக்கை கடக்க வைத்தார். அவர் 24 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 48 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதைக் கைப்பற்றினார். தொடர் நாயகன் விருது ரோஸ்டன் சேசுக்கு அளிக்கப்பட்டது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools