X

கமல் – ரஜினி இணையும் படம்! – எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

விக்ரம் படத்தின் வெற்றி அனைத்து மொழி திரையுலகையும் வியக்க வைத்திருக்கிறது. வெற்றி விழாவில் பேசிய கமல்ஹாசன், இந்த ப்படத்தின் மூலம் எனக்கு பங்கு தொகை ரூ.75 கோடி கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அதை இப்படி வெளியில் சொல்வதன் மூலம் எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் சொல்கிறேன் என்றார்.

சில வருடங்களுக்கு முன்பு தனது ராஜ்கமல் நிறுவனத்தின் புதிப்பிக்கப்பட்ட அலுவலகத்தை திறந்து வைத்தபோது அந்த நிகழ்வில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அலுவலகத்தை திறந்து வைத்து ரஜினி பேசியபோது, நல்ல கதை அமைந்தால் நான் கமல்ஹாசனோடு சேர்ந்து நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறிரியிருந்தார். அப்போது ரஜினி பேசிய விஷயம் பரபரப்பானது. இதை மனதில் வைத்து கமல்ஹாசன் சில பூர்வாங்கப் பணிகளை செய்தார்.

முதலில் ரஜினியும்-கமல்ஹாசனும் சேர்ந்து நடித்தால் அந்தப் படத்தின் பட்ஜெட் யாரும் எதிர்பார்க்காதச் வகையில் மிகப்பெரிய பட்ஜெட்டாக இருக்கும் என்பதே. அதற்கு செலவிட கமல்ஹாசனிடம் பணம் இல்லை என்பதால் கமல்ஹாசனே சில இடங்களில் சொல்லியிருக்கிறார். இதனால் அவருக்காக சில நண்பர்கள் பைனான்ஸ் திரட்டும் பணியில் ஈடுபட்டார்கள். அது அன்றைய சூழலுக்கு மேலும் நகராமல் அப்படியே நின்றுபோனது.

முதலில் கதை எழுதலாம் என்ற கமலின் யோசனையில் தோன்றியதே விக்ரம் படத்தின் முழு ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த கதை. இதற்கு அவர் முதலில் வைத்தப் பெயர் வேறு. லோகேஷ் கனகராஜ் கதை சொல்ல வந்த போது அவர் சொன்ன கதையை கேட்டு விட்டு தன்னிடம் இப்படி ஒரு கதை இருக்கிறது என்று கமல்ஹாசன் சொல்ல, லோகேஷ் மகிழ்ச்சியாக ஒத்துக்கொண்டார்.