கமல்ஹாசன் திமுக-வுடனான் தொகுதி பங்கீடு குறித்து அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்துகிறார்
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரப் படுத்தியுள்ளன.
தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்டவை தொகுதி பங்கீடு தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளன. இந்த பேச்சுவார்த்தையின் போது தி.மு.க.விடம் கூட்டணி கட்சிகள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை வழங்கியுள்ளன.
தி.மு.க. கூட்டணியில் புதிதாக இடம்பெற உள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடனும் விரைவில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. தி.மு.க. கூட்டணியில் கோவை, தென் சென்னை, மதுரை ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளை குறி வைத்து கமல்ஹாசன் காய் நகர்த்தி வருகிறார்.
3 இடங்களை எப்படியாவது கேட்டுப் பெற்றுவிட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக வெளிநாட்டில் இருக்கும் கமல்ஹாசன் சென்னை திரும்பியதும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளிநாட்டில் இருந்து கமல்ஹாசன் நேற்றே சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சென்னை திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வருகிற 17-ந் தேதி கமல்ஹாசன் சென்னை திரும்புவதற்கு வாய்ப்பு இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னர் அடுத்த வாரம் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் கமல் ஹாசன் பேச்சு நடத்த வாய்ப்பு இருப்பதாக தக வல்கள் வெளியாகியுள்ளன. சென்னை திரும்பியதும் கமல்ஹாசன் தி.மு.க. தலை வர் மு.க.ஸ்டாலினை சந் தித்து பேசவும் திட்டமிட்டு உள்ளார். 17-ந் தேதி கமல் ஹாசன் சென்னை திரும்பினாலும் உடனடியாக சந்திப்பு நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை. வருகிற 22-ந் தேதி வரைவில் சட்ட சபை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டம் முடிந்த பின்னர் 23 அல்லது 24 ஆகிய தேதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, கமல்ஹாசன் சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.