பிரபல நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணி ரத்னத்துடன் ”நாயகன்’ படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு ‘தக் லைப்’ என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார். இப்படத்தில் கமல்ஹாசன் , த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து உள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார்.
இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. கமல் தற்போது தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இப்படத்தில் கமல் 3 வேடங்களில் நடிக்க உள்ளார்.
மேலும் இப்படத்தில் நடிக்க இருந்த ‘ துல்கர் சல்மான், நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் ‘கால்ஷீட்’ பிரச்சினை காரணமாக சமீபத்தில் விலகினர். இதனால் அந்த 2 வேடங்களில் நடிக்க படக்குழு வேறு நடிகர்களை தேடியது. அதை தொடர்ந்து அந்த வேடத்தில் சிம்புவை நடிக்க வைக்க படக்குழு பேசியது.
இந்நிலையில் படத்தில் இருந்து விலகிய நடிகர்கள் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், இப்போது மீண்டும் பட யூனிட்டில் இணைந்துள்ளனர். படத்தில் பாலிவுட் நடிகர்கள் பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பில் இவர்கள் இருவரும் பங்கேற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.