Tamilசினிமா

கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ டிசம்பர் 8 ஆம் தேதி மீண்டும் வெளியாகிறது

கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் ஆளவந்தான். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். இந்த படம் உருவான காலத்தில் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டது. எனினும், இந்த படத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பு கிடைக்கவில்லை.

ஆளவந்தான் படம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு தயாரிப்பாளர் எஸ். தானு பதில் அளித்திருந்தார். அப்போது, படத்தை ரீ-ரிலீஸ் செய்வது பற்றி சூசகமாக தகவல் தெரிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து ஆளவந்தான் படத்தின் டிஜிட்டல் வெர்ஷன் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

அந்த வரிசையில், ஆளவந்தான் திரைப்படம் அடுத்த மாதம் ரீ-ரிலீஸ் ஆகும் என்று தயாரிப்பாளர் தானு தெரிவித்து இருக்கிறார். ஆளவந்தான் திரைப்படம் டிசம்பர் 8-ம் தேதி உலகம் முழுக்க ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கடவுள் பாதி மிருகம் பாதி கவிதை பாடல் நேற்று (நவம்ர் 17) மாலை 5.03 மணிக்கு வெளியானது. கமல்ஹாசனுடன் ரவீனா டாண்டன், அனுஹாசன் மற்றும் பலர் நடித்திருக்கும் ஆளவந்தான் படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருக்கிறார்.