X

கமலுக்கு சவால் விட்ட மீரா மிதுன்

தமிழில் சில படங்களில் நடித்த மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். அதன்பின் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் சர்ச்சையான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் விஜய், சூர்யா குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து இருந்தார்.

தற்போது கமலை பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘கல்யாண வீட்டில் சீப்பை ஒளித்து வைத்து கொண்டால் கல்யாணமே நடக்காது என்பது போல் என்னுடைய ஒரே ஒரு வீடியோ காட்சியை மறைத்துவிட்டால் என்னுடைய தொழிலையே நிறுத்திவிடலாம் என்று கமல்ஹாசன் அவர்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் இதே போல் செய்து கொண்டிருந்தால் நானும் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை வரும்.

கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது நீங்கள் கொடுத்த தீர்ப்பு மிகவும் தவறு. ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்த போது ஆணாகிய நீங்கள் இன்னொரு ஆணுக்கு ஆதரவாக இருந்ததை ஏற்று கொள்ளவே முடியாது. நீங்கள் என்னுடைய தொழிலை முடக்க முயற்சித்தால் நானும் உங்கள் தொழிலையும் முடக்குவேன்.

இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியை உங்களால் பண்ணவே முடியாது. நான் குறிப்பிடும் வீடியோ என்னுடைய கைக்கு வரும் வரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பையும் நடத்த விடமாட்டேன். நீதிமன்றத்தில் தடை வாங்குவேன்’ என்று மீராமிதுன் கூறியிருக்கிறார்.