நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் வெற்றி திரையுலகில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தயாரிப்பு முதல் வெளியீடு வரைக்கும் எப்படியெல்லாம் ஒரு படத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பதை விக்ரம் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று பேச வைத்திருக்கிறது.
இது மாநிலங்கள் கடந்த வெற்றியாகவே இருக்கிறது. எந்த படத்திற்கும் இல்லாமல் விக்ரம் படத்தின் ஐந்து மொழிகளுக்கும் புரமோஷன் நிகழ்சிகளுக்கும் கமல்ஹாசனே நேரில் சென்று பேசி வந்தது ரசிகர்களிடையே உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் கொல்கத்தாவில் கிதிர்பூர் நகரில் இருக்கும் ரசிகர்கள் கமல்ஹாசனுக்கு கோவில் ஒன்றை கட்டி வருகிறார்கள். விக்ரம் வெளியாவதற்கு முன்பே திட்டமிடப்பட்ட இந்தக் கோவில் விக்ரம் வெற்றி பெற்றதும் கட்டுமானப்பணியைத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்தக் கோவிலை திறந்து வைக்க கமல்ஹாசனுக்கு கடிதம் மூலம் அழைப்பும் அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொல்கத்தா ரசிகர்கள் கோவில் கட்டியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடவுள் மறுப்புக் கொள்கையில் ஊறிப்போன கமல்ஹாசன் தனக்காக கட்டப்பட்டு வரும் கோவிலை திறந்து வைக்க கொல்கத்தா செல்வாரா? என்பது கேள்விக்குறி தான்.