Tamilசினிமா

கமலின் ‘விக்ரம்’ படம் ஜூலை 8 ஆம் தேதி ஒடிடி-யில் வெளியாகிறது

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தில், முன்னணி நட்சத்திரங்களான, பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடித்துள்ளனர். ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் வசூல் ரூ.300 கோடியைத் தாண்டியுள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து இப்படத்திற்கான வரவேற்பு ரசிகர்களிடையே சற்றும் குறையாத நிலையில் ‘விக்ரம்’ திரைப்படம் ஜூலை 8-ஆம் தேதி ஓடிடி-யில் ரிலீஸாகவுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.