கபாலீஸ்வரர் கோயில்
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயனார் மயிலாப்பூரில் பிறந்து விவசாயியாக வாழ்ந்தவர். அறுபத்து மூன்று நாயன்மார்களின் சரிதத்தைச் சொல்லும் பெரியபுராணம், வாயிலார் நாயனார் அத்தியாயத்தில் ஒரு பணக்கார நகரத்தையும் அதன் துறைமுகத்தையும் குறித்து விவரிக்கின்றது.
பல தேசங்களிலிருந்து வரும் வணிகர்களின் கப்பல்களில் இருந்து இறக்கப்படும் யானைகள் மயிலாப்பூரில் உள்ள எருமைக் கன்றுகளை விட ஒப்பீட்டளவில் சிறியதாக இருக்கும் என்று பெரியபுராணம் மயிலையின் வளத்தைப் புகழ்கின்றது.
மயிலையில் இன்று துறைமுகம் இல்லை. ஆனால் ஒரு காலத்தில் கோட்டைகளுக்கும் போர்க்களங்களுக்கும் பெயர்போனது இவ்வூர்.