கபடியை மையமாக வைத்து உருவாகும் ‘களத்தில் சந்திப்போம்’

விக்ராந்த் நடிப்பில் ‘வெண்ணிலா கபடிக்குழு 2’ சமீபத்தில் வெளியான நிலையில், சசிகுமார் நடிப்பில் கென்னடி கிளப், அதர்வா நடிப்பில் குருதி ஆட்டம் ஆகிய படங்கள் கபடியை மையமாகக் கொண்டு உருவாகிவருகின்றன.

இந்த வரிசையில் தற்போது இணைந்துள்ள படம் அருள்நிதி, ஜீவா இணைந்து நடிக்கும் ‘களத்தில் சந்திப்போம்’. ராஜசேகர் இயக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷ் வெளியிட்டு படக்குழுவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பிரியா பவானி சங்கர், மஞ்சிமா மோகன் என இரு கதாநாயகிகள் இணைந்துள்ளனர்.

நட்பை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தில் ஜீவா, அருள்நிதி இருவரும் கபடி வீரர்கள். சிறுவயது முதலே நண்பர்கள். இருப்பினும் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள். காரைக்குடி பகுதியின் பின்னணியில் கதை நடைபெறுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools