கன்வார் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதி விபத்து – 6 பேர் பலி
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் இன்று அதிகாலை 2.15 மணியளவில் கன்வார் யாத்திரையில் ஈடுபட்ட ஏழு பக்தர்கள் மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
விபத்து குறித்து ஆக்ரா மண்டல கூடுதல் தலைமை இயக்குநர் ராஜீவ் கிருஷ்ணா கூறியதாவது:-
சதாபாத் காவல் நியைத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை 2.15 மணியளவில் கன்வார் பக்தர்கள் 7 பேர் மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். ஒருவர் லேசான காயத்துடன் உயிர்தப்பியுள்ளார். இவர்கள் ஹரித்துவாரில் இருந்து குவாலியருக்கு தங்கள் கன்வார் யாத்திரீகர்களுடன் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளிகளை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.