தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அனேக இடங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழையும் (ரெட் அலர்ட்), நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அதிகபட்சமாக 23 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.