ரெண்டு படம் மூலம் தமிழ் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்த அனுஷ்கா, தமிழில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். ரஜினியுடன் லிங்கா, விஜயுடன் வேட்டைக்காரன், அஜித்துடன் என்னை அறிந்தால், சூர்யாவுடன் சிங்கம், விக்ரமுடன் தெய்வத் திருமகள், தாண்டவம், சிம்புவுடன் வானம், ஆர்யாவுடன் இரண்டாம் உலகம் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
கடந்த சில வருடங்களாகவே மிகவும் குறைவான பட வாய்ப்புகள் பெற்று வருகிறார் அனுஷ்கா. இந்த நிலையில் நடிகை அனுஷ்கா ஷெட்டி, கன்னட தயாரிப்பாளர் ஒருவரை இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனுஷ்காவுக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும், திருமண தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதியாக திருமணத்திற்கு அனுஷ்கா தயாராகிவிட்டதாக தெரிகிறது. இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.