சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு விடுமுறையில் திரைக்கு வருகிறது. தமிழ், தெலுங்கில் மட்டும் உருவாகியுள்ள இப்படத்தை கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடுமாறு ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில், ரசிகர்களின் வேண்டுகோளுக்கினங்க சூரரைப் போற்று திரைப்படம் கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
![AddThis Website Tools](https://cache.addthiscdn.com/icons/v3/thumbs/32x32/addthis.png)