அஜித்-சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்த ‘விஸ்வாசம்‘ திரைப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியானது. அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தை கொண்ட இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
குடும்ப ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்ததால் இத்திரைப்படம் 25 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. கர்நாடகத்திலும் பொங்கல் அன்று தமிழ் மொழியிலேயே வெளியிடப்பட்ட விஸ்வாசம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் கர்நாடகா விநியோக உரிமையை வாங்கிய அதே விநியோகஸ்தர் தற்போது படத்தை கன்னடத்தில் டப் செய்து ‘ஜகா மல்லா’ என்ற பெயரில் வெளியிட திட்டமிட்டுள்ளார். படத்தின் டப்பிங் வேலைகள் முடிந்தவுடன் கன்னடத்தில் வெளிவரும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே கர்நாடகாவில் பிற மொழியிலிருந்து கன்னடத்தில் டப் செய்த படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அவற்றுக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கிறது.