சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சென்னையை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், திருவள்ளூர் மாட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளனர்.