இலங்கை கடலோரப்பகுதி மற்றும் அதனையொட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தீபாவளி வரை பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகை, திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவாரூர், கரூர், திருப்பத்தூர், வேலூர், தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடலூர், புதுக்கோட்டை, நாமக்கல், மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைவிடாது கனமழை பெய்து வருவதால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டுள்ளார்.