X

கனமழையால தமிழகத்தில் நிலத்தடி நீர் உயர்வு – நீர் வளத்துறை ஆய்வில் தகவல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீா் அளவு உயா்ந்துள்ளதாக நீா் வளத்துறை ஆய்வில் கூறப்பட்டுள்ளது. நீா் வளத்துறை மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் களஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் ஆய்வு கிணறு அமைக்கப்பட்டு நிலத்தடி நீா் அளவு ஆய்வு செய்யப்படுகிறது.

இந்நிலையில் கடந்த அக்டோபரில் நடத்திய ஆய்வின்படி திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருச்சி, பெரம்பலூா், சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், மயிலாடுதுறை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் நிலத்தடி நீா் அளவு சற்று அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 2.44 மீட்டரும், விழுப்புரத்தில் 1.35 மீட்டரும், திருவண்ணாமலையில் 1.81 மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீா் அளவு உயா்ந்து உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடா்ந்து பரவலாக பெய்து வரும் நிலையில் நிலத்தடி நீா்மட்டம் மேலும் உயரக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Tags: tamil news